Sunday, February 8, 2026
Your AD Here

யாழ் நல்லூர் ஆலய வீதிக்கு தடை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வீதித்தடை செய்யப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் குறித்த வீதித்தடையானது எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். மேலும் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியினூடாக பயணிக்க முடியும் என யாழ் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்