கடந்த மாதம் 26 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 40 தங்கப் பதக்கங்கள், 44 வெள்ளிப் பதக்கங்கள், 42 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 90 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது.
குறித்த போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சீனா 40 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள், 24 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 91 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் 20 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 45 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.