Monday, February 9, 2026
Your AD Here

எசல பெரஹரா சோதனை நடவடிக்கையில் இரு துப்பாக்கிகள் மீட்பு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நேற்று பிற்பகல் தலதா வீதியில் உள்ள இரு கடைகளில் இரு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் , 2 1/2 அடி நீள வாள் என்பன விஷேட அதிரடிப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு  குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இரு கடைகளின் உரிமையாளர்களையும் விசாரணைக்காக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த இரண்டு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் , வாள் என்பன பழைய பொருட்கள் விற்கப்படும் இரண்டு கடைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிகள் பாவனை செய்யும் நிலையில் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்