நெலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





