Sunday, September 7, 2025
Your AD Here

மாதத்தின் அதிசிறந்த வீராங்கனை விருதை வென்ற சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஜூலை மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை விருதை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து பெற்றுள்ளார் .

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சமரி அத்தபத்து துடுப்பாட்டத்தில் அற்புதமான ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் இவ் விருது அவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதமும் இந்த வருடம் மே மாதமும் ஐசிசி அதிசிறந்த வீராங்கனை விருதுகளை வென்றதன் மூலம் குறித்த விருதை மூன்று தடவைகள் வென்ற மூன்றாவது வீராங்னை ஆனார் சமரி அத்தபத்து.

அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், மேற்கிந்தியத் தீவுகளின் ஹெய்லி மெத்யூஸ் ஆகியோரே இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மற்றைய இருவராவர்.மற்றும் 2023ஆம் ஆணடுக்கான ஐசிசி அதிசிறிந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும்  சமரி அத்தபத்து  தனதாக்கிக் கொண்டிருந்தார்.

இவ் விருதுகளை சீரான இடைவெளியில் பெற்ற சமரி அத்தபத்து தனது அதிசிறந்த ஆற்றல் மூலம் இந்தியாவுக்கு எதிரான ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்து   தனது நாடு   முதல் தடவையாக ஆசிய மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க உதவினார்.

ஐந்து போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைச் சதங்களுடன் 304 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவரது துடுப்பாட்ட சராசரி 101.33 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 146.85 ஆகவும் அமைந்திருந்தது.

மலேசியாவுடனான போட்டியில் சதம் குவித்த சமரி அத்தபத்து, பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலும்  இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அரைச் சதங்களைப் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்