Sunday, February 8, 2026
Your AD Here

ஜனாதிபதியின் கீழ் மூன்று அமைச்சு பதவிகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டமையால் அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டன.

இதற்கமைய இந்த அமைச்சுப் பதவிகளை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்