ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர் கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் வைத்து அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலுகுமார் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





