Sunday, February 8, 2026
Your AD Here

அங்கீகரிக்கப்படாத போஸ்டர்கள் அகற்ற 1,500 பணியாளர்கள்

தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 1,500 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு நான்கு பணியாளர்கள், ஏ-1 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், ஏ-2 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு பணியாளர்கள் என தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தினசரி ஊதியம் வழங்கும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்