இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.
இந்நிலையில் 18 வயதான விஷ்மி குணரத்ன தனது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை நேற்றய தினம் பதிவு செய்து சாதனை படைத்தார்.
பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக சமரி அத்தபத்து மாத்திரமே சதங்களை பெற்றுக் கொண்டுத்திருந்தார்.சமரிக்கு அடுத்ததாக இலங்கை மகளிர் அணிக்காக சதமடித்த 2வது பெண் என்ற சாதனையை விஷ்மி படைத்துள்ளார்.மேலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த இளம் இலங்கை வீராங்கனை என்ற சாதனையையும் விஷ்மி படைத்துள்ளார்.