Sunday, February 8, 2026
Your AD Here

வாக்களிப்பு தொடர்பிலான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது, இந்து – அரேபிய எண்கள் அல்லது ஒரு புள்ளடியை மாத்திரம் பதிவு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.

மேலும் விருப்பு வாக்குகளைப் பதிவு செய்யும்போது, 2 அல்லது 3 என்ற இலக்கங்களை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் அத்துடன், வன்முறைகளைத் தவிர்த்து அமைதியான முறையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலொன்றை உருவாக்குமாறும் அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடு என்ற வகையில், ஜனநாயக கடமையினால் மாத்திரமே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.பெறுமதியான வாக்குகளைச் செல்லுபடியற்ற வாக்குகளாக மாற்றாமல் உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்