அம்பாறை – திருக்கோவில் பகுதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய துண்டுபிரசுர விநியோகம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரசார நடவடிக்கை வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத முன்னெடுக்கப்படுவதாகக் பொலிஸார் விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்ததுடன், பின்னர் செல்வராசா கஜேந்திரன் தரப்பினர் பிரசார நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்திருந்தனர்.
https://www.akarannews.com/?p=2080 ஜனநாயக ரீதியான தலைவரை தேர்ந்தெடுக்க பங்காளிகளாக மாறுவோம்
இருப்பினும் இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு முறைப்பாடளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார் .
