Tuesday, September 9, 2025
Your AD Here

வட கிழக்கிற்குக் காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டோம் -நாமல்

எமது அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கிற்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை 3 வருடங்களில் நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை 3 வருடங்களில் நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொண்ட அரசாங்கமும் எமது நாட்டில் உள்ளது.

யுத்தம், வெற்றி கொள்ளப்படும் எனத் தெரிவித்த அரசாங்கமும் நாட்டில் உள்ளது.விசேடமாகக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட அதிகார பரவலாக்கல் என்பதை எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.நாம் 13 பிளஸை கொண்டு வந்தோம், தேர்தலையும் நடத்தினோம்.

8 ஜனாதிபதிகளும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொடுக்கவில்லை. இந்தநிலையில் அடுத்துவரும், ஜனாதிபதியும் அதனைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாலும், எவராலும் அவற்றை வழங்க முடியாது.

எனவே வடக்கு கிழக்கு இணைவு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை எமது அரசாங்கமும் வழங்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்