Tuesday, September 9, 2025
Your AD Here

டிஜிட்டல்மயமான விவசாயத்தை உருவாக்க திட்டம்

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக இலங்கையை மாற்ற வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டம், பொது நிதிச் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இலங்கை தொழில் நிபுணர்கள் அமைப்பின் 37 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் இப்போது போட்டித்தன்மை மிக்க ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.அந்த இலக்கை அடைவதற்கு, ஆடை கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் அதிக உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது.அவற்றைக் கொண்டு உயர்தரச் சந்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

உலக அளவில் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பயன்படுத்தி தற்போது பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படாத சுமார் 3 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படலாம்.நெல் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.விவசாயம், பால் பண்ணை மற்றும் புதிய பயிர் உற்பத்திக்காகப் பெருமளவான காணிகளை விடுவிக்கத் தீர்மானித்துள்ளோம்.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்