Tuesday, September 9, 2025
Your AD Here

பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக 2010ம் ஆண்டு இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை அவர் தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதன் பின்னர், ஏ.எச்.எம். பௌசி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்