மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அலுவலகம் செயற்படவுள்ளமையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய தேர்தல் நடவடிக்கைகளை இடையூறின்றி நடத்துவதற்கு ஏதுவாக எதிர்வரும் 20ஆம் திகதி வழமையான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.