Tuesday, September 9, 2025
Your AD Here

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும்!

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

03 கோடி ரூபா முதல் 04 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்களின் விபரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்களின் விபரங்கள் வௌியிடப்படும் என்றார்.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுமெனவும், அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்