Tuesday, September 9, 2025
Your AD Here

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்!

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கை கொண்டுவரப்பட வேண்டுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அனைத்துத் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,
“பாடசாலைக் கல்வியின் வளர்ச்சி தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையைக் களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும். குறிப்பாகப் பரீட்சைகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையின் மூலம் செய்யப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்”

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்