Tuesday, September 9, 2025
Your AD Here

தேசிய மக்கள் சக்தியின் லக்க்ஷ்மன் நிபுணராச்சிக்கு ஏன் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவில்லை

அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் பட்டியலில் அடுத்த அதிகூடிய வாக்குகளைப் பெற்ற லக்க்ஷ்மன் நிபுணராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் அறிவித்தது.

அதன்பிறகு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட அமைச்சரவையில் அவரும் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.

இதன்படி, அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய, விஜித ஹேரத் மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோருக்கு அமைச்சுப் பங்கீடு செய்யப்படவிருந்தது.

ஆனால் இறுதியில் லக்ஷ்மன் நிபுணராச்சி தவிர்ந்த ஏனைய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் லக்ஷ்மன் நிபுணராச்சிக்கு என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரியாது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் இது இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவானது நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்று வர்த்தமானியில் பிரகடனம் செய்திருந்தாலும் அமைச்சராக செயற்படுவதற்கு நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் கருத்து என நிபுணராச்சி கூறுகிறார்.

ஆனால் பசில் ராஜபக்ஸ முன்னர் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்யாமல் அமைச்சராக செயற்பட்டதாகவும், தமது கட்சி முன்னைய தவறுகளை செய்யாத காரணத்தினால், தன்னைத் தவிர ஏனைய மூவரையும் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க தீர்மானித்ததாகவும் அவர் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்