Tuesday, September 9, 2025
Your AD Here

ரணில் பக்கம் தாவியவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள மொட்டுக் கட்சி

கட்சியில் இருந்த விலகி கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் கட்சியின் இணையுமாறு மொட்டுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கட்சி மறுசீரமைக்கப்படும் என்றும், திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தங்களது ஆதரவை வழங்கியிருந்துனர்.

அதன் போது, திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, அஜித் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த, கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சுயேட்டை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்திருந்தனர்.

ஜனாதிபதி தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5740179 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதுடன் சஜித் அவருக்கு அடுத்த படியாக 4530902 பெற்றிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், 2299767 வாக்குகளை மட்டுமே பெற்று ரணில் விக்ரமசிங்க முன்றாவது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்