Thursday, September 11, 2025
Your AD Here

வாகனங்களில் அரச இலச்சினையினைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை!

அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில், அரச இலச்சினை, திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் வகையில், இவ்வாறு செயற்படுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வாகனங்களுக்கு அரசாங்க இலச்சினை மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான சுற்றறிக்கையை 2002 இல், பொது நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சீர்திருத்தங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரச சின்னங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக 1992 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மீளாய்வு செய்து சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

1992 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வாகனங்களில் அரச இலச்சினையைப் பயன்படுத்துவது தொடர்பாக மட்டுமே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அந்த அறிவுறுத்தல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச இலச்சினையுடன் அமைச்சு, திணைக்களம் அல்லது நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும் எனத் திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்