Wednesday, September 10, 2025
Your AD Here

நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்களுக்காக அனுபவம் வாய்ந்த இரண்டு பொருளாதார ஆலோசகர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டன..

.இலங்கையின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழிகாட்ட இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நியமனங்கள் சம்பளம் அல்லது வேறு சலுகைகள் எதுவுமின்றியது என தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்னாண்டோ ஆகிய இருவரும் புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசகர்கள் என அமைச்சர் ஹேரத் அறிவித்தார்.

அமைச்சரவையின் ஆலோசனையின் மூலம் தனது ஊழியர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும், அரசியலமைப்பின் 41 (1) வது சரத்தின் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்களாக துமிந்த ஹுலங்கமுவ மற்றும் கலாநிதி அனில் பெர்னாண்டோ ஆகியோரின் நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரண்டு கௌரவ நியமனங்களும் 24 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்