Thursday, February 12, 2026
Your AD Here

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர் !

இந்த வருடம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து இனவாதம் குறித்து அறிக்கை வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்