Wednesday, September 10, 2025
Your AD Here

எமது கேள்விகளுக்கு பயந்து அமைச்சர்கள் பாராளுமன்றத்தை புறக்கணிக்கின்றனர்..!

உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பான வேலைத்திட்டங்கள் இடம்பெறும் இவ் நாட்களில் நாம் மட்டக்களப்பில் இருந்து எமது மக்களது பிரச்சனைக்கான தீர்வுகள் தொடர்பில் பாராளுமன்றம் வருகை தந்தால் எமது கேள்விகளுக்கான பொறுப்பான பதிலை வழங்கும் அமைச்சர்கள் பயத்தில் பாராளுமன்றம் வருகை தருவதில்லை. இதனால் எமக்கு பாரிய நேர விரையம் ஏற்படுகின்றது. மக்களது பிரச்சனையும் ஓர் முடிவில்லாமல் நீண்டுகொண்டு செல்கின்றது. இதனை சபாநாயகர் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றைய தினம் 12.03.2025 பாராளுமன்றத்தில். என்னால் கேட்கப்பட்ட வாய்மூல விடைக்கான வினாக்கள்‌. கெளரவ சாணக்கியன்‌ ராஜபுத்திரன்‌ இராசமாணிக்கம்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ வெகுசன ஊடக அமைச்சரைக்‌ கேட்பதற்கு. மட்டக்களப்பு மாவட்டத்தில்‌, போரதீவுபற்று பிரதேச செயலாளர்‌ பிரிவுக்கு உரித்தான பளுகாமம்‌ பிரதேசத்தில்‌ அமைந்துள்ள தபால்‌ அலுவலகத்திற்கு நிரந்தரக்‌ கட்டிடமொன்று இல்லையென்பதுடன்‌ மேற்படி தபால்‌ அலுவலகம்‌ தற்காலிக கட்டிடமொன்றில்‌ பேணிவரப்படுகின்றறு என்பதை அவர்‌ அறிவாரா என்பதையும்‌; ஆமெனில்‌, மேற்படி தபால்‌ நிலையத்திற்கு நிரந்தரக்‌ கட்டிடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுமா என்பதையும்‌; அக்கட்டிடம்‌ நிர்மாணிக்கப்படும்‌ காலப்பகுதி யாதென்பதையும்‌; அவர்‌ இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல் ஏன்? என்னும் வினா எழுப்பப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்