Wednesday, September 10, 2025
Your AD Here

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி…

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வாவுக்கு மேலதிக வசதிகள் எதுவும் வழங்க்கபடவில்லை என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த புதன்கிழமை (05) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்