மாத்திரமே உள்ளன. அவற்றில் 5 இயந்திரங்கள் தேசிய புற்றுநோய் வைத்தியசாலையிலும், இரண்டு இயந்திரங்கள் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் உள்ளன. மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் காலி தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த 10 இயந்திரங்களும் அடிக்கடி செயலிழப்பதை காணக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் தொழிற்சங்கம் என்ற ரீதியில் சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ள போதும், அமைச்சு அதை கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. எவ்வாறெனினும் இந்த இயந்திரங்கள் முழுமையாக பழுதுப்பார்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.