Tuesday, September 9, 2025
Your AD Here

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு – சஜித் !…

நாட்டில் இடம்பெற்றுவரும் மிலேச்சத்தனமான கொலைகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பாக அமையும். அதனால் கொலை கலாசாத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அண்மையில் இந்த சபையில் உரையாற்றினேன். அக்மீமன பூஸ்ஸ கொலை,தல்தன மீகாகியுல கொலை, அமுனுகொலபெலஸ்ஸ கொலை, வெலிவேறிய துப்பாக்கி பிரயோகம், மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மரணங்கள் தொடர்பில். அதேநேரம் அண்மையில் அம்பலங்கொடை பிரதேசத்தில் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் இரண்டு படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.இடம்பற்றுவரும் இந்த சம்பவங்களால் பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பாக இந்த பிரச்சினை எமது நாட்டு மக்களுக்கும் பிரச்சினை. அதேபோன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் எமது சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பாகும். அதனால் நாட்டில் செயற்பட்டுவரும் மிளேச்ச,மனித படுகொலை கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கு துரித வேலைத்திட்டம் ஒன்றை சட்டம் ஒழுங்கு அமைச்சு ஊடாக கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.இந்த பிரச்சினை தொடர்பில் நேற்றைய தினம் தெரிவித்திருந்தேன் இன்றைய தினமும் தெரிவிக்க வேண்டி ஏற்பட்டது. பொலிஸ்மா அதிபரை இன்னும் தேடிக்ககொள்ள முடியாமல் இருக்கிறது. அதேபோன்று நீதிமன்றதில் இடம்பெற்ற மனித கொலையை திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. நாள்தோறும் இடம்பெறுகின்ற இந்த மிலேச்சத்தனமான, மனித படுகொலை கலசாரத்துக்கு முடிவில்லையா? இதற்கு தீர்வில்லையா? இந்த நிலைமையால் நாட்டு மக்கள் கடுமையாக பாதுகாப்பற்ற தன்மைக்கு ஆளாகியிருக்கின்றனர்.அதனால் இதுதொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் கவனம்செலுத்தி தெளிவான தீர்வொன்றை வழங்க வேண்டும். அதற்கான தீர்வு என்ன என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்