Tuesday, September 9, 2025
Your AD Here

பிள்ளையான் வியாழேந்திரன் தலைமையில் புதிய கூட்டமைப்பு!…

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (15) மட்டக்களப்பு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு இன்று உதயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டு இயங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல், சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்