Tuesday, September 9, 2025
Your AD Here

வனவிலங்கு கணக்கெடுப்பு – அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.!

விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான படிவங்களை விநியோகிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பொலன்னறுவை கிரிதலே பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வீடமைப்பு பிரதி அமைச்சர் டீ.பி. சரத் நேற்றைய தினம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான படிவங்களை கமத்தொழில் அமைச்சு மூலம் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

அதனை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் ஆகியோரை ஏற்பாடு செய்திருந்தோம்.

குறித்த படிவமொன்றை அச்சிட படிவம் ஒன்றுக்கு முப்பது சதம் செலவிடப்பட்டிருந்தது.அது பொதுமக்களின் வரிப்பணம். அதனை வீணாக்க எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் இடமளிக்க முடியாது.

எனவே உரிய முறையில் விவசாயப் பயிர்களுக்குச்சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான படிவங்ககளை விநியோகிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் டீ.பி.சரத் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்