Tuesday, September 9, 2025
Your AD Here

கல்முனை RDHS பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு  கடந்த திங்கட்கிழமை(17) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்  தலைமையில் இடம்பெற்றது.

குறித்த இப்தார் நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர்  வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கல்முனை நகர ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம கதீப் அஷ்ஷேஹ் அல்-ஹாபிழ் எம்.எச்.எம்.இர்பாத் (ரஷாதி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து இப்தார் ஏற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் எம்.ஏ.நியாஸ் இப்தார் நிகழ்வினை திறம்பட செய்வதற்கு ஒத்துழைத்த சகலருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரை நிகழ்த்தினார்
.

1

  1. ↩︎

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்