Tuesday, September 9, 2025
Your AD Here

சம்மாந்துறை பிரதேச சபைக்கான    வேட்பு மனுக்களை தாக்கல் செய்த   நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு.

அம்பாறை  உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை  நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு புதன்கிழமை(19)  தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு  கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தனியாக களமிறங்கியுள்ளது.


இதற்கான வேட்பு மனுக்களை நாபீர் பவுண்டேஷனின் அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் உடனான குழு   தாக்கல் செய்திருத்தனர்.

இதனைத் தொடர்ந்து  ஊடகங்களுக்கு நாபீர் பவுண்டேஷனின் அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் கருத்து தெரிவிக்கும் போது

எதிர் வருகின்ற 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கும் நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையில் கைப்பற்றும்.எமது தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீர் மக்களின் சேவகன்.தன்னை சமூகத்திற்காக அர்ப்பணித்தவர்.அவரைப் பற்றி இங்கு அறிமுகப்படுத்த தேவையில்லை.மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்களை  முன்னெடுத்தவர்.அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சியாளர் அலுவலகத்தில் வேட்பு மனுவை கையளித்த சந்தர்ப்பத்தில் எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் என கூடுதலான போட்டிகள் நிலவுகின்ற போதும் கடந்த 32 வருட காலமாக நாங்கள் செய்த சேவை நிமித்தம் மக்கள் இடம் இன்று நாங்கள் ஆணையைக் கேட்டு நிற்கின்றோம்.இனம் மதம் கட்சி வேதம் பாராமல் பரவலாக மக்களுக்கு செய்த சேவைகளின் அடிப்படையில் இம்முறை குறித்த சம்மாந்துறை பிரதேச சபையை மையமாகக் கொண்டே நாங்கள் களமிறங்குகின்றோம். இதன் வெற்றியின் அடிப்படையில் எதிர் வருகின்ற காலங்களில் எமது அரசியல் பாழடைந்து அடைந்து செல்லும் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கடந்த கால சேவைகளை அரசியலின் அடிப்படையில் வியாபிக்க வேண்டும் என்பதை எமது பூரண இலக்காக காணப்படுகின்றது. அதற்காக எனது மக்கள் எனக்கான அரசியல் அதிகாரத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்