தமிழோடும்,தேசியத்தோடும் பயணிக்கின்றோம் என்கின்ற வகையிலே தமிழரசுக் கட்சி அம்பாறையில் பெரும்பான்மையான சபைகளில் ஆட்சியை கைப்பற்றும் என்று கவிந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழரசுக்கட்சி சார்பாக பொத்துவில், திருக்கோவில், ஆலயடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேசங்களுக்கான வேட்பு மனுத் தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடும் போது,
எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே பெரும்பான்மை இடங்களை தமிழரசுக் கட்சி நிச்சயமாக கைப்பற்றும்.
தமிழரசுக் கட்சி தனது கொள்கை, நடைமுறை ரீதியாக நிச்சயமாக மக்களுக்காக தங்களது சேவைகளை ஆற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைத்து சபைகளிலும் பெரும்பான்மையான ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றும்.
ஏனென்றால் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பது என்பதை விட தனித்துவமான ஒரு ஆட்சியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுதான் தமிழரசுக்கட்சி இந்த முறை களம் இறக்கப்பட்டு இருக்கிறது.
தமிழரசுக் கட்சியிலே களமிறக்கப்பட்ட அத்தனை வேட்பாளர்களும் மிகவும் திறமையானவர்கள், சிறந்த வேட்பாளர்களாகும். சமூக சேவை மற்றும் ஏனைய விடயங்களிலே அக்கறை கொண்டவர்களைத்தான் நாங்கள் இந்த தேர்தலிலே களமிறக்கியி
ருக்கின்றோம்.
எமது தமிழரசுக்கட்சியிலே போடப்பட்ட
வேட்பாளர்கள் தற்பொழுது தேர்தலுக்காக, அபிவிருத்திக்காக வந்த வேட்பாளர்கள் அல்ல. நாங்கள் களமிறக்கியுள்ள வேட்பாளர்கள், கடந்த காலங்களிலே பல வருடங்களாக தங்களது அபிவிருத்தி வேலைகளையும், சமூக ரீதியான வேலைகளையும் முன்கொண்டு
முக்கியத்துவம் கொடுத்த வேட்பாளர்களைத்தான்
நாங்கள் களமிறக்கி இருக்கிறோம்.
இப்போது புதிதாக வந்திருந்து இந்த தேர்தலுக்காக பணத்தை செலவழித்தோ மக்களை ஏமாற்றியோ வருகின்ற வேட்பாளர்களை நாங்கள் களத்திக்குள்ளே நுழைய விடவில்லை. அந்த வகையில் நிச்சயமாக தமிழரசுக்கட்சி அனைத்து பிரதேசங்களையும் கைப்பற்றி அம்பாறை மாவட்டத்திலே தமிழரின் இருப்பை காப்பாற்றுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கும். தமிழையும், தமிழ் தேசியத்தையும் அம்பாறை மாவட்டத்தில் நிலைநாட்டுவதற்காக தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் நிச்சயமாக பாடுபடுவார்கள். தமிழ் மக்கள் என்றும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் பயணிக்கின்றவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை, தமிழரசுக் கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன், அதிகப்படியான வெற்றி வாய்ப்பை உண்டு பண்ணுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்பதனையும் எங்களது மக்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் என்றார்.