Tuesday, September 9, 2025
Your AD Here

தமிழரசுக் கட்சியிலே களமிறக்கப்பட்ட அத்தனை வேட்பாளர்களும் மிகவும் திறமையானவர்கள், சிறந்தவர்கள் எனவே நாம் நிச்சயமாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையான சபை களை கைப்பற்றுவோம்!

தமிழரசுக் கட்சியிலே களமிறக்கப்பட்ட அத்தனை வேட்பாளர்களும் மிகவும் திறமையானவர்கள், சிறந்தவர்கள் எனவே நாம் நிச்சயமாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையான சபை களை கைப்பற்றுவோம் என முன்னாள் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் காரைதீவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடும் போது,

இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழரசுக்கட்சி சார்பாக பொத்துவில், திருக்கோவில் ஆலயடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேசங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் எதிர் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே அனைத்து இடங்களையும் தமிழரசுக் கட்சி நிச்சயமாக கைப்பற்றும். அதுமட்டுமல்ல, தமிழோடும்,தேசியத்தோடு பயணிக்கின்ற வகையிலே தமிழரசுக் கட்சி தனது கொள்கை ரீதியாகவும், தனது நடைமுறை ரீதியாகவும் நிச்சயமாக மக்களுக்காக தங்களது சேவைகளை ஆற்றும் என்ற அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைத்து சபைகளிலும் பெரும்பான்மையான ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றும்.

ஏனென்றால் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பது என்பது நிச்சயமாக அதனை விட தனித்துவமான ஒரு ஆட்சியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுதான் தமிழரசுக்கட்சி இந்த முறை களம் இறக்கப்பட்டு இருக்கிறது. தமிழரசுக் கட்சியிலே களமிறக்கப்பட்ட அத்தனை வேட்பாளர்களும் மிகவும் திறமையானவர்கள், சிறந்தவர்கள். சமூக சேவை மற்றும் ஏனைய விடயங்களிலே அக்கறை கொண்டவர்களைத்தான் நாங்கள் இந்த தேர்தலிலே களமிறக்கி
யிருக்கின்றோம்.

இங்கே வந்திருக்கின்ற வேட்பாளர்கள்,
இந்த எலெக்ஷனுக்காக, அபிவிருத்திக்காக வந்த வேட்பாளர்கள் இல்லை. இவர்கள் கடந்த காலங்களிலே பல வருடங்களாக தங்களது அபிவிருத்தி வேலைகளையும், சமூக ரீதியான வேலைகளையும் முக்கியத்துவம் கொடுத்து களத்தில் நின்றவர்கள்

இப்போது புதிதாக வந்திருந்து தேர்தலுக்காக பணத்தை செலவழித்தோ மக்களை ஏமாற்றியோ வருகின்ற வேட்பாளர்களை நாங்கள் இந்த களத்திக்குள்ளே நுழைய விடவில்லை. அந்த வகையில் நிச்சயமாக தமிழரசுக்கட்சி அனைத்து பிரதேசங்களையும் கைப்பற்றி, அம்பாறை மாவட்டத்திலே தமிழரின் இருப்பை காப்பாற்றுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கும்.

தமிழையும், தமிழ் தேசியத்தையும் நிலைநாட்டுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் நிச்சயமாக பாடுபடுவார்கள். தமிழ் மக்கள் என்றும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் பயணிக்கின்றவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை, தமிழரசுக் கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அதிகபடியான வெற்றி வாய்ப்பை உண்டு பண்ணுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. என்பதனையும் எங்களது மக்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் நன்றி.

அதேபோன்று முஸ்லிம் பெயர் தாங்கிய பல கட்சிகள் கூட்டிணைந்து நாங்கள் ஆட்சி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறுகின்றார்கள். உண்மையிலேயே அவர்கள் கூறுகின்ற விடயம் அவர்களைப் பொறுத்தமட்டில் அது சரியானதாக இருக்கும் ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரைக்கும் தனித்துவமாக நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும். தனியாக எங்களுடைய பிரதேச சபையை கைப்பற்ற வேண்டும்.

முஸ்லீம்கள் சிறுபான்மையாகவும், தமிழர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கின்ற அடிப்படையில் கடந்த காலங்களிலும் ஆட்சி அமைத்தது தமிழரசுக் கட்சிதான்.
அதே போன்று இம்முறையும் நாங்கள் எங்களுடைய பலத்தோடு ஏனைய தமிழ் சார்ந்த கட்சிகளையும் இணைத்து நாங்கள் ஆட்சி அமைப்போம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு வாக்களிப்பது மக்கள். மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களித்து இருக்கிறார்கள். அந்த அடிப்படையிலேயே இம்முறையும் எங்களுக்கு அந்த வாக்குகளை பெருவாரியாக அளிக்க இருக்கின்றார்கள். நிச்சயமாக சபையை நாங்கள் கைப்பற்றுவோம். குறிப்பாக தேசிய மக்கள் சக்தியோ ஏனைய கட்சிகளுக்கு நாங்கள் விட்டுக் கொடுப்பதற்கான செயற்பாட்டை மக்கள் முன்னெடுக்க மாட்டார்கள். அப்படியான ஒரு வரலாற்று துரோகத்தையும், வரலாற்றுப் பிழையையும் எமது மக்கள் கடந்த காலங்களிலும் விட்டவர்கள் அல்ல இப்போதும் விடமாட்டார்கள் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

தேர்தல் கேட்பது வேட்பாளர்கள். எங்களை ஆட்சியமைக்க செய்வது மக்கள் ஆகையால், மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நான் மானசீகமாக நம்புகின்றேன்.

வரலாற்று பிழைகளை எமது மக்கள் ஒருபோதும் விட்டதில்லை. ஆகையால் இம்முறையும் காரைதீவு பிரதேச சபையை நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு நிச்சயமாக கைகோர்ப்பார்கள் என்று திடமான நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற தேர்தலின் போது அண்டன் என்கின்ற ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியிலே, NPP கட்சியிலேயே அவர் போட்டியிட்டார். பல ஆயிரக்கணக்கான வாக்குகளை தமிழ் பிரதேசங்களில் பெற்றிருந்தார். அவரால் இது வரைக்கும் செய்யப்பட்ட அபிவிருத்திகள் என்ன என்பது மக்களுக்கு முற்றுமுழுதாக தெரியும்.

பிரதேச செயலகத்தைபெற வேண்டும் என்கின்ற மாயையை அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி அதில் அரசியல் செய்து வருகின்றது. அதற்கு கூட இன்னும் தீர்வு எட்டப்படாத நிலைதான் இருக்கின்றது. அதேபோன்றுதான் காரைதீவு பிரதேச சபை மாத்திரமல்ல, ஆறு பிரதேச சபைகளிலே npp கட்சி அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சில எல்லைகளை நாங்கள் தருகிறோம், தீர்வுகளை தருகின்றோம் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தருகிறோம் எனக்கூறி இம்முறையும் சிலர் வாக்குகளை கைவசப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த பல அமைப்பாளர்கள் ஏமாந்து போன வரலாறு திடமாக இருக்கின்றது. ஆகையால் நிச்சயமாக இது ஒரு ஏமாற்று வித்தை என்பதை நான் கூறிக் கொள்கிறேன்.

வடகிழக்கிலே குறிப்பாக தமிழ் பிரதேசங்களிலே தேசியக் கட்சி வாக்குகளை பெறுவதற்கு வழமையான முயற்சி எடுக்கின்றது. வழமை தேர்தல் காலங்களில் சிறு சிறு குழுக்களை போட்டு உங்களுடைய வாக்குகளை சிதைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு சிங்கள பிரதேசத்திலே தமிழரசுக் கட்சி போட்டியிட முடியுமா அப்படி போட்டியிட்டு வாக்குகளை பெற முடியாது என்பது எங்களுக்கு தெரியும்.

பிரித்தாளும் தந்திர வார்த்தைகளை தேசிய கட்சிகள்தான் செயல்படுத்தி கொண்டு வருகின்றது. குறிப்பாக எங்களோடு அவர்கள் தீர்வுத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்கள் தொடர்பாக பேசுவதற்கு தான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு தமிழ் மக்களை தமிழ் மக்கள் வாக்களித்து அனுப்புகின்றார்கள். ஆகையால் அவர்கள் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்து தாங்களே தீர்வு கொடுப்போம் என்றுதான் பல நாடாளுமன்ற புதுமுகங்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு போனது. அந்த பாராளுமன்றத்திலே இப்போது என்ன நடக்கின்றது. குறித்த பிரதிநிதிகளால் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

குறிப்பாக வந்த மாத்திரத்திலேயே யாழ்ப்பாணத்தில் பெயர் பலகை கூட சிங்களத்தாலே முதல் போட்ட வரலாறு இருக்கின்றது.அந்த பெயர் பலகையை மாற்றுவதற்குத்தான் அவர்கள் குரல் கொடுத்த ஒரு நிலை இருக்கின்றது. ஆகையால் இருப்பதை இல்லாதொழிப்பதை பாதுகாப்பதற்கு எங்களுடைய கட்சி தொடர்ச்சியாக போராடுவதோடு கடந்த காலங்களிலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமிழ் மக்களுடைய காணிகளை மீட்கின்ற பிரச்சினைகளிலே தமிழரசுக் கட்சிதான் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றது. வந்தவர்கள் அனைவருமே அவர்களுக்கு ஆதரவாகவும் தங்களுடைய பதவி நிலையை காப்பாற்றுவதற்காகத்தான் கருத்துக்களை கூறுகின்றார்களே தவிர, தற்துணிவாக அரசோடு முயற்சி எடுத்து மீனவர்களுடைய பிரச்சனை, எங்களுடைய நிலமீட்பு பிரச்சினைகள், எங்களுடைய பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் உடைய பிரச்சனைகளை இது வரைக்கும் தீர்த்த வரலாறு இல்லை.தேர்தலுக்கு பிற்பாடு நடைபெற போவதும் இல்லை.

ஆகையால் மக்கள் கவனமாக நிதானமாக இருக்க வேண்டும். அமைப்பாளர்கள் இன்று மௌனித்து தமிழரசு கட்சி தான் தமிழர்களுடைய பிரதிநிதி நாங்கள் பிரித்த வாக்குகளை சிதறடித்து அநியாயம் செய்து விட்டோம் என்கின்ற காரணத்தினால்தான் இம்முறை கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 120 வேட்பாளர்கள் களம் இறங்கி இருந்தும் அதை விட குறைவாகத்தான் இம்முறை தேர்தலில் களமிறங்கி இருக்கின்றார்கள்.

ஆகையால் பல வேட்பாளர்கள் சீசனுக்கு வந்து சீசன் முடிய போய் விடுவார்கள் அதேபோல இந்த சீசனுக்கு வரும் வியாபாரிகள் பலபேர் இங்கு இல்லை. உங்களுக்கு தெரியும் முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள், மொட்டு கட்சியிலே இருந்தார்.அவர் ஒரு கட்சியை ஆரம்பித்தார் இன்று வந்து இன்னொரு கட்சியோடு இணைந்து இருக்கின்றார் என்றால் இவ்வாறு அரசாங்கத்தோடு செயல்பட்டவர்களுக்கு இப்போது பயம் பிடித்திருக்கின்றது.
அதனால் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே ஒத்திகை பார்ப்பதற்காக கூட்டு முயற்சியோடு இறங்குகின்றார்கள்.

ஆகையால் தமிழ் மக்களினுடைய தூய்மையான பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சி என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 3 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 1 ஆசனமும், திருகோணமலையில் 1 ஆசனங்களையும், கிழக்கு மண் தமிழ் தேசியத்தோடு பின்னிப் பிணைந்து உறுதி செய்திருக்கின்றது. உள்ளூராட்சி சபைகளிலே வடகிழக்கு பூராக தமிழரசுக் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை சமூகம் சார்ந்து அளிப்பார்கள். இதனால்தான் நாடு யாரோடு வேண்டுமானாலும் இருக்கட்டும். நாங்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும். வீடுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது மக்களுடைய ஒரு கோட்பாடாக இருக்கின்றது.

அபிவிருத்தி என்ற விடயங்களில் அறவே இல்லாமல் இருந்தாலும் மக்களை பயமுறுத்துவதற்கும் விவசாயிகள் தொடர்ச்சியாக அடிப்பதற்கும் யானை தற்போது காட்டுக்குள் இருந்தது நாட்டுக்குள் வந்துவிட்டது. இப்பொழுது கூட ஒரு செய்தி கிடைத்தது, கோமாரிலே ஒருவரை அடித்து கொன்றிருக்கிறது. ஆகையால் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூட முடியாத நிலை இன்று அரசாங்கத்தினால் காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்திலே நான் வளையா மீனுக்கு முந்நூறு ரூபாயாக்குவேன், நெல் ஒரு மூடையை 6000 ரூபாயாக மாற்றுவேன் என்று சொல்வதற்காக நான் தேர்தல் கேட்கவில்லை. ஏனென்றால் விவசாயிகளும் வாழனும், மீனவர்களும் வாழனும் மக்களும் வாழனும் அதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். நிச்சயமாக அபிவிருத்தி சார்ந்து எங்களுடைய ஆட்சியை அமைப்பதற்கு தான் நான் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே களம் இறங்கி இருக்கின்றேன்.

தமிழ் பேசும் மக்களை இணைத்துத்தான் நாங்கள் ஆட்சி அமைப்போம். குறிப்பாக தமிழ் கட்சிகள் அதாவது தமிழர்கள் சார்ந்த கட்சிகள் பெரும்பான்மையாக தமிழர்களுக்கு என்றும் சிறுபான்மையாக முஸ்லிம்கள் இருக்கின்றோம்.

கடந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியோடு முஸ்லிம்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கித்தான் நாங்கள் ஆட்சியை அமைத்திருந்தோம் இம்முறை எங்களுக்கு தனித்து தமிழ் பிரதிநிதிகளை வைத்து ஆட்சி அமைக்க முடியும். 7 ஆசனத்தை பெற்று இருந்தோம். ஆனால் நாங்கள் எங்களின் பிரதேசத்துக்குள்ளே நல்லிணக்கம் என்ற ஒரு அடிப்படையிலேயே அவர்களை இணைத்து தான் நாங்கள் பயணிக்க முடியும். இந்த சபையிலே நாங்கள் முஸ்லிம்களை புறந்தள்ள முடியாது. அதாவது நாங்கள் இல்லாமல் அவர்கள் இல்லை. அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. ஆகையால் தமிழ் பேசும் மக்களுடைய ஆட்சிதான் காரைதீவு பிரதேச சபையிலே நிலவும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்