Monday, September 8, 2025
Your AD Here

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவுக் கிளையின் வேட்பாளர் அறிமுக விழா.

இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைமையிலான பிரதேச சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை(30)   விவேகானந்தா விளையாட்டுக் கழக மண்டபத்தில் நடைபெற்றது.

 மேலும் இந் நிகழ்வுக்கு விஷேட அதிதிகளாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன்,  இராசமாணிக்கம் சாணக்கியன்,   ஞா.ஸ்ரீநேசன்,  சி.ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வு காரைதீவு இலங்கை தமிழரசு கட்சி கிளை  செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ் தலைமை தாங்கியது டன் இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளரும் இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கருத்து  தெரிவிக்கையில்

தொடர்ச்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றி வருகின்றது. இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சியே காரைதீவு பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும்.அதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் அதிகப்படியான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும். ஏன் என்றால் இங்கு உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இனம் சார்ந்த நிலம் சார்ந்து சிந்திக்கின்றார்கள்.  எமது மக்களை எமது மக்கள்தான் ஆள வேண்டும்.சிலர் இன்னும் பெரும்பான்மை கட்சிகளோடு இணைந்து எம் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் .  என்றார்.

மேற்படி நிகழ்வில்  ஏனைய வேட்பாளர்களும் பெருந்தொகையான ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்