நீண்டகாலமாக நடத்தப்படாமலிருக்கின்ற மாகாணசபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய மாகாணசபைகளின் ஆயுள்காலம் 2014 செப்டம்பர் உடன்முடிவடைந்துவிட்டதை பவ்ரல் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.ஆனால் பல காரணங்களிற்காக அரசாங்கங்கள் இதனை நடைமுறைப்படுத்தவில்லை,பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் தேர்தலை நடத்துவதற்கான சட்ட நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பவ்ரல் தெரிவித்துள்ளது.
மாகாணசபை தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் மக்கள் மத்தியிலும் சிவில் சமூகத்தினர் மத்தியிலும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன,என தெரிவித்துள்ள பவ்ரல் இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது பிற்போடுவது ஜனநாயக கொள்கைகளை சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும்,அமையும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேர்தல்களை நடத்தாமலிருப்பது அரசியலமைப்பு ஏற்பாடுகளை ஜனநாயக மரபுகளை மீறும் செயல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என பவ்ரல் குறிப்பிட்டுள்ளது.





