புகையிலையுடன், வெற்றிலை, மது அருந்துதல் ஆகியன புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம்
வாய் அறுவை சிகிச்சை பிரிவின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதில் கவனம்
இலங்கை வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை (College of Oral and Maxillofacial Surgeons of Sri Lanka) நிபுணர்கள் கல்லூரியின் 20ஆவது வருடாந்த விஞ்ஞான அமர்வு – 2025, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது.











