இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமாருக்கு நெருக்கமான மற்றுமொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிகந்தை தீவுச்சேனை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரே இன்று மாலை மட்டக்களப்பு – கிரான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.





