Friday, December 19, 2025
Your AD Here

1967, 1977 போல் 2026 தேர்தலும் அமைய போகிறது!

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக ‘வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு’ என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.

இதன்பின் பேசிய விஜய் கூறியதாவது,

1967, 1977 போல் 2026 தேர்தலும் அமைய போகிறது. 1967, 1977 இல் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்தே வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்று கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைபிடிப்போம். அண்ணா சொன்னதை கடை பிடித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.

தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு சென்று அனைவரையும் சந்தித்தவர்களே வெற்றி பெற்றனர். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்