Friday, December 19, 2025
Your AD Here

UNESCO இலங்கை தேசிய ஆணைக்குழு – புதிய அலுவலர் குழு நியமனம்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், பிரதமரின் பங்கேற்புடன் நேற்று (29) பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், கலாநிதி ஹரினி அமரசூரிய யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதேவேளை, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜனத் தொடர்பாடல், சமூகவியல் மற்றும் சுற்றாடல் ஆகிய முக்கிய துறைகளில் யுனெஸ்கோ அமைப்பின் இலக்குகளுக்கு அமைய, தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களில், துறைசார் நிபுணர்களான கலாநிதி ஆஷா டி வோஸ், சந்திரா விக்ரமசிங்க, கலாநிதி டீ. பி. மெதவத்தகெதர, சுவாமிநாதன் விமல் ஆகியோருடன், யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க மற்றும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் நதீகா ரத்நாயக்க ஆகியோரும் அடங்குவர்.

மேலும், நியமிக்கப்பட்ட மற்றைய உறுப்பினர்களாக ஹேமந்த புபுதுசிறி, சசிகலா பிரேமவர்தன, சமந்தி சேனநாயக, செல்வி அப்சரா கல்தேரா, மொஹமட் நவாஸ், ஆர்.ஏ.டி.எஸ். ரணதுங்க, டபிள்யூ.ஜி. குமாரகம, சுஜீவ பல்லியகுருகே, தீபா லியனகே, எச்.ஏ.எச். பெரேரா, எஸ்.எஸ்.பி. டி அல்விஸ், வருண ஸ்ரீ தனபால, டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.எஸ்.சி. பளம்கும்புர, எம்.எஸ்.எல்.ஆர்.பி. மாரசிங்க, கலாநிதி நிலான் குரே மற்றும் செல்வி சனுஜா கஸ்தூரியாரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்