Tuesday, September 9, 2025
Your AD Here

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம்..! இரா சாணக்கியன்.

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நேரடியான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையில் 49 பேரூந்துகளில் 23 பேரூந்துகள் தான் மக்களுக்கான சேவையில் ஈடுபடுகின்றது. 26 பேரூந்துகள் சேவையில் இல்லாமல் பலவகைப்பட்ட திருத்தங்களில் உளௌளன. அவற்றில் 05 பேரூந்துகள் விபத்துக்குள்ளாகி அத னுடைய வெளிப்புறம் உடைந்து திருத்தப்படாமல் உள்ளன. 21 பேரூந்துகளில் சின்ன திருத்தங்களுடன் உள்ளன. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து கலந்துகொண்ட கூட்டத்தில் இரண்டு மாதங்களுக்குள் பேரூந்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவேன் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு மாதமாகியும் இதுவரையும் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இடம்பெறவில்லை. பேரூந்து சாலைகளில் உள்ள பழைய பேரூந்துகளை புனருதானம் செய்கின்ற திட்டம் ஒன்றினை அமுல்படுத்தியிருந்தார்கள். அந்தவகையில் வாழைச்சேனை பேரூந்துசாலையிலும் ஒரு பேரூந்து வர்ணம் பூசி வெளித்தோற்றம் மிக அழகாக உள்ளது. ஆனால் அதற்கு என்ஜின் இல்லை. அவ்வாறு என்ஜின் இல்லாத பேரூந்தினை மட்டக்களப்பிற்கு அனுப்பி மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என கூறுவது வேடிக்கையான விடயம்.

மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது அதனை இனவாதமாக காட்டி பேசுவதை தடைசெய்வது ஒரு கவலையான விடயம். சிறந்த உதாரணமாக 30.07.2025ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி சம்பந்தமான கூட்டம் இடம்பெறப்போகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை. இந்தக் கூட்டத்தினை மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த கௌரவ சுனில் ஹந்துன்நெத்தியும், கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரும் தான் நடாத்தப்போகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் அங்குள்ள மக்களின் எதிர்காலம் தொடர்பாக ஆராயப்படுகின்ற கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பாடாமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு முயாற்சி எடுக்கின்ற போது இந்த NPP அரசாங்கம் தடையாக உள்ளது. இந்த அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான அரசாங்கமாக உள்ளது. ஏனென்றால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியற்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வினைப் பற்றி பேசும் போது அதை ஒரு இனவாதம் என கூறுகின்றார்கள். அண்மையில் மாகாண சபைகளுக்கு பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார் புதிதாக எ ல்லை நிர்ணயம் செய்யப்போவதாக கூறுகின்றார். நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்ட மூலத்தினை பயன்படுத்தவில்லை என்பதால் தான் எல்லைநிர்ணயம் செய்யப்போகின்றார்கள். ஒரு புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை கொண்டுவரப்போகின்றார்கள். அதேவேளை ஊடக அறிக்கையில் தாங்கள் ஒரு புதிய சட்டமூலம் கொண்டுவரப் போவதாகஉள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கு நிலையில் இல்லாமல் இருந்த காலத்தில் நடைபெற்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வருவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள் வழங்க முடியாத நிலையிலே தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து இந்த அரசாங்க செயற்படுவதைப் போன்று தான் தெரிகின்றது. வடக்கு கிழக்கில் அதிகூடிய சபைகள் தமிழரசுக் கட்சியின் கைவசம் இருக்கின்ற போது இப்போது மாகாணசபைகளை வைத்துக்கொண்டு இந்த உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது. உள்ளூராட்சி மன்றங்காளுக்கு தேவையான அனுமதிகாளை மாகாண சபைகள் வழங்க வேண்டும். மாகாண சபை இன்மையின் காரணமாக ஆளுநர் வழங்க வழங்க வேண்டியுள்ளது. ஆனால் ஆளுநர் அவற்றை இழுத்தடிப்பு செய்கின்றார். பாராளுமன்றத்தில் எங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவதையே ஒருவிடயமாக அவைத்தலைவர் வைத்திருக்கின்றார். மாவட்டமட்ட கூட்டங்காளில் பெறப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்த தவறுகின்ற போது பாராளுமன்றத்தில் பேச முற்படுகின்ற போது அதனை தடுப்பதுடன், அவர்களை குழப்புவதாகவும் கூறுகின்றனர்.

அனேகமான சுற்றுலாப் பயணிகள் இவ் போக்குவரத்து சேவையினை பாவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ் விடையம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்