Tuesday, September 9, 2025
Your AD Here

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசுக் கட்சி வேண்டுகோள்.!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசுக் கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர்கள் ஒரு பொது வேலைத்திட்டத்திற்குள் இணங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சு என்றே இது எமக்கு கூறப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்போது அவசரமாக ஜெனிவா அமர்வுகள் இடம்பெறும் நிலையில் பொறுப்புக் கூறல் தொடர்பான பொதுத் தீர்மானம் ஒன்று வர இருக்கின்ற நிலையில் அது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே அவர்களையும் அழைப்பதற்கான முயற்சி ஒன்றினையும் மேற்கொண்டோம் ஆனால் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.

அந்த முயற்சியின் இறுதி வடிவமாக மகஜர் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அதில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இருந்து கையொப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் கையொப்பம் மாத்திரமே இப்போது அதில் சேர்க்கப்பட வேண்டும். ஆகவே அவர்கள் இது குறித்து பரிசீலித்து அவர்கள் அவசரமான ஒரு முடிவை சொல்ல வேண்டும்.

தமிழரசுக் கட்சினர், தங்களுடைய செயற்குழுக் கூட்டமோ அல்லது மத்திய குழுக் கூட்டமோ நாளை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதாகவும் அதிலே இந்த கடிதம் ஆராயப்பட்டு, அந்த கூட்டம் முடியும் இடத்தில் இதில் தொடர்ந்தும் அக்கறை இருப்பதாக இருந்தால் எங்களையும் சிவில் சமூக அமைப்பினரையும் வந்து சந்தித்து இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வருவதாக சொல்லப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்