மாணவர் தலைமைத்துவம் மற்றும் நெறிமுறைகள் மேம்பாட்டுத் திட்டம் எனும் தொனிப்பொருளில் அஸ்டோ (ASSDO) அணுசரனையில் செயலமர்வு இன்று(1) மாலை நடைபெற்றது.
கல்முனை கமு/கமு/அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இச்செயலமர்வு நடைபெற்றதுடன் அஸ்டோ (ASSDO) தலைவர் யு.எல்.றியாழ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வின் வளவாளராக மேஜர் கே.எம். தமீம் வன்முறையற்ற தொடர்பாடல் என்ற தலைப்பில் பல்வேறு விளக்கவுரைகளை மேற்கொண்டார்.
மேலும் தரம் 9 ,10 ,11, 12, மாணவர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டதுடன் சிரேஸ்ட உளவளத்துறையாளர் என்.எம் நௌசாதத்தும் பங்கேற்று மாணவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
மாதந்தோறும் ஒரு பயிற்சி வகுப்பு என 3 மணித்தியாலமாக இடம்பெறும் இச்செயலமர்வில் அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதுதவிர வாழ்வில் தொடர்பாடல் என்பது பிரதானமான ஒன்றாகும்.
இன்றைய சூழலில் பல்வேறு காரணிகளால் மனிதர்கள் மற்றவர்களின் உணர்வுகள் தேவைகளை புரிந்து கொள்ளாது தனது எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்ள முனைகின்றார்கள் இதனால் மாணவர்களிடையே முரண்பாடான நடத்தைகள் சமூகத்தில் பழிவாங்கும் உணர்வுகள் விருப்பங்களை மற்றவர் மீது திணிப்பது போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.இதிலிருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் மற்றவர்களின் உணர்வுகளை மதித்து தனது தேவைகளை அடைந்து கொள்வதற்கு இவ்வாறான செயலமர்வுகள் உதவும் என வளவாளராக கலந்து கொண்ட மேஜர் கே.எம். தமீம் தெரிவித்தார்.







