Monday, September 8, 2025
Your AD Here

‘நீதி தேடும் பெண்கள் – நமது கடந்த காலமும் எதிர்காலமும்’.

இலங்கையின் பெண் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கொழும்பு 07, சர்வதேச பெண்கள் சங்க மண்டபத்தில் நடைபெற்ற ‘நீதி தேடும் பெண்கள் – நமது கடந்த காலமும் எதிர்காலமும்’ கண்காட்சியைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கடந்த 01 ஆம் திகதி பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், நிலங்களை இழந்தமை, கட்டாய இடப்பெயர்வு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நிற்கும் பெண் செயற்பாட்டாளர்களின் ஒலி, ஒளி மற்றும் கலைநயமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் செயலூக்கமுள்ள பெண் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பைக் காட்சிப்படுத்துவதே கண்காட்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இலங்கையில் பெண்களின் நீதிக்கான போராட்டத்தை நிலைப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவர், ஒக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் அவசரகாலப் பயிற்சி மையத்தின் (CENDEP) மனித உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஃபரா மிஹ்லார் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்