கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், மீண்டும் பொதுவெளியில் பிரச்சாரத்திற்காக தோன்றினார்.
டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரை பேரணியில் ஈடுபட்டு இருந்த போது மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பிரச்சார மேடையில் மீண்டும் டொனால்ட் டிரம்ப்..! சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் | After Attempt Donald Trump Arrives In Milwaukee
இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அத்துடன் பல்வேறு உலக தலைவர்களும் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதல்தாரி 20 வயது Thomas Matthew Crooks என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மீண்டும் பொதுவெளியில் டிரம்ப்
இந்நிலையில் கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்..
பிரச்சார மேடையில் மீண்டும் டொனால்ட் டிரம்ப்..! சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் | After Attempt Donald Trump Arrives In Milwaukee
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டி: வெற்றிவாகை சூடிய அர்ஜென்டினா!
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டி: வெற்றிவாகை சூடிய அர்ஜென்டினா!
இதற்கு முன்னதாக சனிக்கிழமை மாலை விமான பயணத்தின் போது Washington Examiner-க்கு அளித்த பேட்டியில், கொலை முயற்சிக்கு பிறகான பிரச்சார உரை முற்றிலும் மாறியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த உரை நாட்டிற்கு, உலகிற்கும் ஒருமைப்பாட்டின் செய்தியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்