எஸ்டோனியா நாட்டின் பிரதமர் காஜா கல்லஸ் பதவி விலகியுள்ளார்.
எஸ்டோனியாவின் பிரதமர்
ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் காஜா கல்லஸ் (Kaja Kallas).
இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவராக புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதன் காரணமாக காஜா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு வழி வகுத்துள்ளது.
புதிய கூட்டணி
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி அலார் காரிஸ் (Alar Karis), அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதாக அறிவித்தார். காஜா கல்லஸின் பதவி விலகலைத் தொடர்ந்து, எஸ்டோனியாவின் (Estonia) அரசியல் கட்சிகள் இந்த மாத இறுதிக்குள் புதிய கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொள்ளும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.