Sunday, September 7, 2025
Your AD Here

அது ரொம்ப சவாலா இருக்கு போட்டுடைத்த தமன்னா!…

நட்சத்திர நடிகையான நடிகையான தமன்னா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, கோ வேங்கை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை தமன்னா.இதனிடையே பாலிவுட்டில் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வெப் சீரிசலும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக அவரின் நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட வெப் தொடரில் நடித்த தம்மன்னா அதன் மூலம் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கிக்கொண்டார்.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ரீல்ஸ் வீடியோக்கள் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறியுள்ளார். அதாவது, ” ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டும் படம் பார்த்தார்கள், ஆனால் இப்போது OTT தளத்தில் படம் பார்க்கிறார்கள். எங்களுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் பெரும் போட்டியாக இருக்கிறது” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்