Thursday, December 18, 2025
Your AD Here

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைலான ஏறாவூர் நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம்பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்.

ஏறாவூர் நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம், நேற்று ஏறாவூர் நகர சபை மாநாட்டு மண்டபத்தில், கௌரவ நகர முதல்வர் எம். எஸ். நழீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போதான வரவு–செலவுத் திட்ட வாக்கெடுப்பில், ஆதரவாக 11 உறுப்பினர்களும் எதிராக ஒருவரும், நடுநிலையாக ஒருவரும் செயற்பட்டதுடன் வாக்கெடுப்பு நேரத்தில் 4 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னம் ஆகி இருக்கவில்லை –

மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட இந்த வரவு–செலவுத் திட்டத்திற்கு, 17 மொத்த உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபையில் நேற்று வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 13 உறுப்பினர்களில் 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் எம். எஸ். நழீம்,
உறுப்பினர்கள் ஏ. எம். அஸ்மி, எம். ஐ. ஏ. நாஸர், எஸ். எம். ஜப்பார், எம். ஆர். நஸீர், ஏ. எம். உவைஸ் அல் ஹபீழ், ஏ. சுபைதா உம்மா ஆகிய 7 பேரும்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் உறுப்பினர் எஸ். ரகுபரன் ஆகியோருடன்
தவிசாளர் தெரிவின் போது எதிரணியில் செயற்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என். சுதாகரன், ஆர். பிரபா ஆகியோர் இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததுடன்

ஐக்கிய தேசியக் கட்சி பட்டியல்
உறுப்பினர் என். எம். சரீனா எதிராக வாக்களித்த அதேவேளை
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். யூ. கரீம் றகுமான் நடுநிலை வகித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உறுப்பினர்களான எச். எம். அன்வர், எம். சமீம், சியாதா முஹம்மட் நஸீர்,
மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஆர். ரிக்கினாஸ் ஆகிய 4 பேரும் தாமதமாக வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் சபைக்கு பிரசன்னம் ஆகியதுடன் தங்களின் எதிர்பாரா தாமத வருகையை கருத்திற்கொண்டு மீள் வாக்கெடுப்பை கோரியபோதும் அது சட்ட வழிமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்