Saturday, December 20, 2025
Your AD Here

ஐஸ் போதைப்பொருளுடன் வீடொன்றில் ஐவர் கைது-சம்மாந்துறையில் சம்பவம்.

ஐஸ் போதைப்பொருள்களுடன் வீடான்றில் 5 பேர் தங்கியிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாடி கிராமம் 01 பகுதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நடவடிக்கையின் போது 2,055 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் – மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள்இகைத்தொலைபேசிகள் என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது கைதான சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயசீலன் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்