தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கபட்டது.
அதன் போது ,வேலன் சுவாமி , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் , வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பனர் , ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள் என மூன்று உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.
ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்திரி அகிலன் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் , ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துடன் வழக்கினை எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





