Sunday, February 8, 2026
Your AD Here

ஜனாதிபதியின் நிவாரண நிதியத்திற்கு நிதியுதவி அளித்த  கார்மேல் பற்றிமா தேசிய  பாடசாலை  Y2k family எனும் அமைப்பு.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  கார்மேல் பற்றிமா தேசிய  பாடசாலையில்   2000 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக ஒன்றாக இயங்கும்  Y2k family எனும் அமைப்பு  அண்மைக்காலமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.


இதற்கமைய அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டிக்வா புயல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு தற்போது மக்கள் மீண்டு வருகின்றனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக ஜனாதிபதியின் நிவாரண நிதியம் அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்க  ஜனாதிபதியின் நிவாரண நிதிய  கணக்கிலக்கத்திற்கு இன்று(23)  ரூபா இரண்டு  இலட்சத்தி ஐம்பதாயிரம்    ரூபாவினை  குறித்த அமைப்பு மருதமுனையில் உள்ள மக்கள் வங்கி கிளையில் வைப்புச் செய்துள்ளனர்.

அத்துடன் அதற்கான பற்றுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை  கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் ஏ.ஜே. அதிசயராஜிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்