அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி, எதிர்பாராத விதமாக இயங்கியதில் அவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உத்தியோகத்தர் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உத்தியோகத்தரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





